எனது அடுத்த படத்தின் கேரக்டர் இதுதான்.. நயன்தாரா வெளியிட்ட சூப்பர் புகைப்படம்..!

  • IndiaGlitz, [Monday,January 08 2024]

நயன்தாரா நடித்த 'அன்னபூரணி’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது இந்த படம் ஓடிடியிலும் வெளியாகி உள்ளது. இந்நிலையில் நயன்தாரா நடித்து வரும் அடுத்த திரைப்படத்தின் கேரக்டர் குறித்த புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நயன்தாரா நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று ’தி டெஸ்ட்’. கிரிக்கெட் கதையம்சம் கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு காஞ்சிபுரத்தில் ஒரு கோவிலில் நடைபெற்று வருகிறது.

சசிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் மாதவன் நயன்தாரா ஜோடியாகவும், சித்தார்த், மீரா ஜாஸ்மின் ஜோடியாகவும் நடித்து வருகின்றனர். தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என நான்கு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நடிகை நயன்தாரா தனது சமூக வலைதளத்தில் 'தி டெஸ்ட்’ திரைப்படத்தில் தான் குமுதா என்ற கேரக்டரில் நடித்து வருவதாக பதிவு செய்துள்ளார். மேலும் இந்த படம் குறித்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

மேலும் இந்த படம் தவிர நடிகை நயன்தாரா ‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.