'பிகில்' படத்தில் நயன்தாராவும் 'சிங்கப்பெண்ணா?

  • IndiaGlitz, [Wednesday,July 24 2019]

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் 'பிகில்' படத்தின் 'சிங்கப்பெண்ணே' பாடல் நேற்று இரவு வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் இந்த பாடல் சாதிக்க விரும்பும் பெண்களுக்கான தேசிய கீதம் என்று கருதப்படுகிறது. இந்த பாடலில் உள்ள ஒவ்வொரு வரிகளும் எழுச்சி மிக்கதாக இருக்க்கும் நிலையில் அதற்கேற்றவாறு ரஹ்மானின் குரலும் உச்சஸ்தாயில் இருப்பதால் இந்த பாடல் சாதிக்க விரும்பும் ஒவ்வொரு பெண்ணையும் உத்வேகப்படுத்தும் என்றும், இந்த பாடல் ஒவ்வொரு பெண்களுக்கான நிகழ்ச்சியிலும் ஒலிக்கும் என்று கருதப்படுகிறது.

இந்த நிலையில் இந்த பாடல் பெரும்பாலும் கதையோட்டத்திற்கேற்ப கால்பந்து வீராங்கனைக்கு ஏற்ற வகையில் வரிகள் அமைந்திருக்கும் நிலையில் இந்த பாடலில் நாயகி நயன்தாராவும் கால்பந்து மைதானத்தில் இருப்பது போன்ற ஸ்டில்கள் உள்ளன. எனவே நயன்தாரா இந்த படத்தில் கால்பந்து வீராங்கனையாகவோ அல்லது பயிற்சியாளர்கள் குழுவில் இருப்பவராகவே நடித்திருக்க வாய்ப்பு அதிகம் என கருதப்படுகிறது.

பொதுவாக அட்லியின் படத்தில் நாயகியின் கேரக்டர்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கும். அதிலும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு நிச்சயம் விஜய் கேரக்டருக்கு இணையான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நயன்தாராவும் கால்பந்து வீராங்கனையாக அதாவது 'சிங்கப்பெண்களில்' ஒருவராக நடித்திருப்பதாக உறுதி செய்யப்பட்டால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு பலமடங்கும் அதிகரிக்கும் என கருதப்படுகிறது.