close
Choose your channels

'ஐரா' படத்தில் நயன்தாராவின் கேரக்டர் குறித்த தகவல்

Friday, October 12, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'கோலமாவு கோகிலா' மற்றும் 'இமைக்கா நொடிகள்' ஆகிய திரைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் நடித்து கொண்டிருக்கும் படங்களில் ஒன்றான 'ஐரா'வின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.

இந்த படத்தில் முதல்முறையாக நயன்தாரா இரட்டை வேடங்களில் நடித்து வருவதாகவும், அவற்றில் ஒரு கேரக்டரின் பெயர் 'ஐராவதி' என்றும் இந்த கேரக்டர் பெயரின் சுருக்கம் தான் 'ஐரா' டைட்டில் என்றும் இயக்குனர் சர்ஜூன் கூறியுள்ளார்.

'ஐராவதி' என்பது கடவுள் இந்திரனின் யானையின் பெயர் என்றும், அது யானைகளுக்கெல்லாம் அரசன் என்றும், இந்த படத்திலும் அதுபோன்ற ஒரு கேரக்டர் என்பதால் இந்த பெயரை தேர்வு செய்ததாகவும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படம் முழுக்க முழுக்க 'மாயா' போன்று ஒரு சீரியஸ் த்ரில்லர் படம் என்றும், ஹாரர் காமெடி படம் இல்லை என்றும் இயக்குனர் கூறியுள்ளார். மேலும் இந்த படத்தில் யோகிபாபுவுக்கு படம் முழுவதும் தோன்றும் ஒரு முக்கிய கேரக்டர் என்று கூறிய இயக்குனர் இந்த படத்தில் கலையரசன் மற்றும் ஜெயப்பிரகாஷ் முக்கிய வேடங்களில் நடித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த படத்தை வரும் டிசம்பரில் கிறிஸ்துமஸ் திருநாளில் வெளியிட திட்டமிட்டிருப்பதால் அதற்குள் படத்தின் பணிகளை முழுமையாக முடிக்க படக்குழுவினர் இரவுபகலாக பணிபுரிந்து வருவதாகவும் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment