காதலருடன் ஓணம் கொண்டாடிய நயன்தாரா: வைரலாகும் புகைப்படங்கள்

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் ஓணம் பண்டிகையை கொண்டாட தனி விமானத்தில் சென்னையிலிருந்து கொச்சி சென்றார் என்ற செய்தி வெளியானதை ஏற்கனவே பார்த்தோம். விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் தனி விமானத்தில் இருந்து இறங்கி செல்லும் புகைப்படமும் வைரலானது.

இந்த நிலையில் தற்போது கேரளாவில் உள்ள தனது வீட்டில் நயன்தாரா ஓணம் பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. குறிப்பாக விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் நயன்தாரா ரசிகர்களால் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகையை கொண்டாட தனது சொந்த ஊருக்கு செல்வதை தவறாமல் கடைபிடித்து வரும் நயன்தாரா இந்த ஆண்டு தனது காதலரையும் அழைத்துச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் ஓணம் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் புகைப்படங்கள் குறித்து ரசிகர்கள் சுவாரஸ்யமான கமெண்ட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர்.