சென்னையில் மூடப்பட்ட பழமையான தியேட்டரை வாங்கினாரா நயன்தாரா? பரபரப்பு தகவல்..!

  • IndiaGlitz, [Sunday,May 21 2023]

சென்னையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மூடப்பட்ட பழமையான தியேட்டரை நடிகை நயன்தாரா விலைக்கு வாங்கி உள்ளதாக கூறப்படுவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரை உலகில் உள்ள பல பிரபலங்கள் சொந்தமாக தியேட்டரை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சிவாஜி கணேசன், நாகேஷ் உட்பட பழம்பெரும் நடிகர்கள் தியேட்டர் வைத்திருந்தனர். அதேபோல் தற்போது விஜய் உள்பட ஒரு சில பிரபலங்களும் தியேட்டர் வைத்துள்ளனர்.

இந்த நிலையில் நடிகை நயன்தாரா சென்னையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மூடப்பட்ட அகஸ்தியா தியேட்டரை விலைக்கு வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

சென்னை அகஸ்தியா தியேட்டர் கடந்த 2020 ஆம் ஆண்டு மூடப்பட்டது. எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினி உள்பட பல பிரபலங்களின் திரைப்படங்களை வெளியிட்ட இந்த தியேட்டர் கடந்த 1967ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இவர்களது குடும்பத்திற்கு சொந்தமான தியேட்டர் தான் சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவி தியேட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

1967ஆம் ஆண்டு பாலச்சந்தரின் ’பாமா விஜயம்’ என்ற திரைப்படம் தான் இந்த தியேட்டரில் முதல் படமாக திரையிடப்பட்டது. அதன் பிறகு பல வெற்றி திரைப்படங்கள் இந்த தியேட்டரில் திரையிடப்பட்டது என்பதும் 50 ஆண்டுகளுக்கு மேலாக ரசிகர்களை இந்த தியேட்டர் மகிழ்வித்தது என்பது குறிப்பிடத்தக்கது.