முதல்முறையாக நயன் குழந்தைகளுக்கு கிடைத்த அனுபவம்.. க்யூட் வீடியோ வைரல்..!

  • IndiaGlitz, [Saturday,March 30 2024]

நடிகை நயன்தாராவின் குழந்தைகளுக்கு முதல் முறையாக கிடைத்த அனுபவம் குறித்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தம்பதிகளுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் இருக்கும் நிலையில் இந்த குழந்தைகளின் புகைப்படத்தை அவ்வப்போது நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார் என்பதும் அவை க்யூட்டாக இருப்பதாக ரசிகர்களுக்கு கமெண்ட் செய்து வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்நிலையில் முதல் முறையாக நயன்தாரா தனது இரட்டை குழந்தைகளை போட்டிங் அழைத்துச் சென்றுள்ளார். நயன்தாராவின் குழந்தைகளுக்கு இது முதல்முறை போட்டிங் அனுபவம் என்பதால் அவர்கள் வித்தியாசமாக போட்டையும் தண்ணீரையும் பார்க்கும் காட்சிகள் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் உள்ளது.

இந்த வீடியோவுக்கு ‘போட்டிங் வித் மை பாய்ஸ்’ என கேப்ஷனாக நயன்தாரா பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.