நயன்தாரா பெற்ற முத்தத்திலேயே இதுதான் பெஸ்ட்: வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்

  • IndiaGlitz, [Monday,May 11 2020]

இயக்குனர் ஹரி இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் உருவாகிய அய்யா. திரைப்படத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு அறிமுகமான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, கடந்த 15 ஆண்டுகளாக கோலிவுட் திரையுலகில் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகில் நம்பர் ஒன் நடிகையாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நயன்தாராவுக்கு தனது அட்வான்ஸ் அன்னையர் தின வாழ்த்துக்களை இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். எதிர்காலத்தில் தன்னுடைய குழந்தைக்கு அம்மாவாகப்போகும் நயனுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள் எனக்கூறி விக்னேஷ் சிவன் பதிவு செய்த ஸ்டேட்டஸ் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அன்னையர் தினத்தில் நயன்தாரா குறித்து மேலும் ஒரு பதிவு வெளியாகியுள்ளது. நயன்தாரா பெயரில் உள்ள இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாரா குழந்தையாக இருக்கும்போது உள்ள புகைப்படம் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் அவரது அம்மா அவருக்கு முத்தம் கொடுப்பது போன்ற பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு க்யூட்டான அந்த புகைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குழந்தையாக இருக்கும்போதே நயன்தாரா கொள்ளை அழகாக இருப்பதாக அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

மேலும் நயன்தாரா திரைப்படத்திற்காக எத்தனையோ முத்தங்களை பெற்றிருந்தாலும் அம்மாவிடம் இருந்து பெற்ற இந்த முத்தத்திற்கு ஈடு இணை இருக்காது என்றும் ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகிறார்கள்.

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ‘தர்பார்’ படத்தில் நடித்த நயன்தாரா, தற்போது ’நெற்றிக்கண்’ ’அண்ணாத்தே’ ’மூக்குத்தி அம்மன்’ ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்களின் படப்பிடிப்பு கொரோனா பரபரப்பு முடிந்த பின்னர் தொடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

HAPPIEST AMMA DAY‼️ #happymothersday

A post shared by nayanthara?? (@nayantharaaa) on May 10, 2020 at 7:45am PDT

More News

புலிட்சர் விருதைத் தட்டிச்செல்லும் 3 இந்திய புகைப்பட கலைஞர்கள்!!! சாதித்தது என்ன???

காஷ்மீரின் சிறப்பு அஸ்தஸ்து நீக்கப்பட்ட காலத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களை படமெடுத்த  3 இந்திய புகைப்பட கலைஞர்களுக்கு புலிட்சர் விருது அறிவிக்கப் பட்டுள்ளது

குடும்ப பகை எதிரொலி: 10ஆம் வகுப்பு மாணவி பெட்ரோல் ஊற்றி கொலை

விழுப்புரம் அருகே இரு குடும்பத்துக்கும் இடையே ஏற்பட்ட முன்பகை காரணமாக பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தொடர்ந்து முதலிடத்தில் ராயபுரம்: பின்னாலே விரட்டி வரும் கோடம்பாக்கம்: சென்னை கொரோனா நிலவரம்

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் நாள்தோறும் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் நேற்று சென்னையில் மட்டுமே 500க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சி

நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் எப்போது?

கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான விஜய்சேதுபதி, நயன்தாரா நடித்த 'நானும் ரவுடிதான்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடிகை நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும்

கொரோனா பரவல் நேரத்தில் உடலுறவு கொள்ளலாமா??? புதிய ஆய்வு என்ன சொல்கிறது???

கடந்த 2 மாதங்களாக கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக உலகமே முடங்கி இருந்தது.