அம்மனை அடுத்து முருகனை தரிசித்த நட்சத்திர காதல் ஜோடி!

  • IndiaGlitz, [Tuesday,December 10 2019]

தமிழ் சினிமாவின் நட்சத்திர காதல் ஜோடிகளில் ஒன்றான இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆகிய இருவரும் இன்று காலை கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் அம்மனை தரிசித்தனர் என்ற செய்தியை சற்றுமுன் பார்த்தோம்

இந்த நிலையில் குமரியில் அம்மனை தரிசித்து முடித்தவுடன் அங்கிருந்து நேராக திருச்செந்தூர் சென்று திருச்செந்தூர் முருகனை இருவரும் தரிசனம் செய்துள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் ஒரு சில ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் விக்னேஷ் சிவன், நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை இயக்க உள்ளார். அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் தர்பார் படத்தில் நடித்து முடித்திருக்கும் நயன்தாரா தற்போது இயக்கும் மிலந்த் ராவ் இயக்கும் நெற்றிக்கண் என்ற படத்திலும் ஆர்ஜே பாலாஜி இயக்கும் ‘மூக்குத்தி அம்மன்’என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களையும் முடித்த பின்னர் அவர் தனது காதலரை திருமணம் செய்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது