இரட்டை குழந்தைக்கு பெயர் வைத்தவுடன் நயன் - விக்கி சென்றது எங்கே தெரியுமா? வைரல் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Wednesday,April 05 2023]

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் தங்களது இரட்டை குழந்தைகளுக்கு சமீபத்தில் பெயர் வைத்த நிலையில் தற்போது இருவரும் குலதெய்வம் கோயிலுக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிகள் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தனர் என்பதும் தெரிந்ததே.

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் சமீபத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் தனது இரட்டை குழந்தைகளின் பெயர்களை அறிவித்தார் என்பதும் அந்த பெயர்கள் உயிர் ருத்ரோநீல் N சிவன், உலக் தெய்விக் N சிவன் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் N என்பது உலகின் சிறந்த தாயான நயன்தாராவை குறிக்கும் என்றும் விக்னேஷ் சிவன் விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் கும்பகோணம் அருகே உள்ள குலதெய்வம் கோவிலுக்கு வழிபாடு செய்ய சென்றனர். சென்னையில் இருந்து திருச்சி வரை விமானத்தில் சென்று அவர்கள் அதன் பின் காரில் குலதெய்வம் கோவிலுக்கு சென்று வழிபட்டனர் என்றும் இது குறித்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே திருமணமான புதிதில் இருவரும் குலதெய்வம் கோவிலுக்கு சென்று வழிபட்ட நிலையில் தற்போது குழந்தைகளுக்கு பெயர் வைத்த நிலையில் குலதெய்வம் கோவிலுக்கு சென்று வழிபட்டுள்ளனர். நயன்தாரா, விக்னேஷ் சிவன் குலதெய்வம் கோவிலுக்கு சென்ற போது அவர்களுடன் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு செல்பி எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

More News

மகள்களுடன் ஆக்ஷன் கிங் அர்ஜுன் எங்கே சென்றிருக்கிறார் தெரியுமா? வைரல் வீடியோ..!

ஆக்ஷன் கிங் அர்ஜுன் தனது மகள்களுடன் கேரளாவில் உள்ள கபினி அணை அருகே சென்ற நிலையில் அது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

சன் டிவி 90s தொகுப்பாளினி ரத்னாவிற்கு இவ்வளவு பெரிய மகளா? 

சன் டிவி செய்தி வாசிப்பாளராக பல வருடங்களாக இருந்து வரும் ரத்னாவின் மகன், மகள் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. 

10 வருடங்களுக்கு முன் பிக்பாஸ் பாவனிரெட்டி எப்படி இருந்தார் தெரியுமா? கிளாமர் புகைப்படங்கள் வைரல்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தொலைக்காட்சி நடிகை பாவனிரெட்டியின் 10 வருடங்களுக்கு முந்தைய புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. 

30 மில்லியன் பார்வையாளர்களை கடந்த 'அகிலன்': வித்தியாசமான முறையில் விளம்பரப்படுத்திய ஜீ5 

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமாக விளங்கும் ஜீ5 ஓடிடி தளத்தின் சமீபத்திய வெளியீடான 'அகிலன்' படத்தின் 30 மில்லியன் பார்வை நிமிடங்களை  கொண்டாடும் விதமாக, ஒரு வித்தியாசமான விளம்பர

ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் திடீர் சந்திப்பு.. 'தலைவர் 171' பட அறிவிப்பா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகிய இருவரும் திடீரென சந்தித்து   உள்ளதாகவும் இருவரும் ஒரு படத்தில் இணைய இருப்பதாகவும் கூறப்படுகிறது.