முதல்முறையாக வெளியூருக்கு இரட்டை குழந்தைகளை அழைத்து சென்ற நயன்தாரா.. வைரல் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Wednesday,March 08 2023]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முதல் முறையாக தனது இரட்டை குழந்தைகளை வெளியூருக்கு அழைத்துச் சென்ற நிலையில் விமான நிலையத்தில் குழந்தையுடன் நயன்தாராவை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பதும் வாடகை தாய் மூலம் இந்த தம்பதிகள் இரட்டை குழந்தைகளை பெற்றுக் கொண்டனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் நடிகை நயன்தாரா கடந்த சில நாட்களாக ஷாருக்கானின் ’ஜவான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக மும்பை சென்றிருந்த நிலையில் கணவர் மற்றும் குழந்தைகளுடன் அவர் மும்பை சென்றிருந்தார். நேற்றுடன் அவரது காட்சியின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து அவர் இன்று சென்னை திரும்பினார்.

இந்த நிலையில் மும்பை விமான நிலையத்தில் தன்னுடைய கணவர் மற்றும் இரட்டை குழந்தைகளுடன் நயன்தாரா சென்ற போது ரசிகர்கள் எடுத்த புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் ஆளுக்கு ஒரு குழந்தையை கையில் வைத்திருக்க, புகைப்படக்காரர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக குழந்தையின் முகத்தை இருவரும் கைகளால் மூடியிருந்தது அந்த புகைப்படங்களில் இருந்து தெரியவருகிறது. இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகிறது.