நயன்தாராவின் உண்மையான திருமண தேதி.. முடிவுக்கு வரும் வாடகைத்தாய் விவகாரம்

நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்துகொண்ட நிலையில் அவருடைய உண்மையான பதிவு திருமணம் 6 ஆண்டுகளுக்கு முன்பே நடந்ததாக தற்போது தெரியவந்துள்ளது.

நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிகள் திருமணமான 4 மாதத்தில் குழந்தை பெற்றுக் கொண்டதால் பெரும் சர்ச்சை எழுந்தது என்பதும், இதுகுறித்து விசாரணை செய்ய தமிழக அரசு மூன்று நபர் குழு ஒன்றை அமைத்து என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி சென்னை காவல்துறை ஆணையத்தில் வழக்கறிஞர் ஒருவர் நயன்தாரா சட்டத்தை மீறியுள்ளதாகவும் இது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில் விசாரணைக் குழுவிடம் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிகள் சில ஆவணங்களை சமர்ப்பித்ததாகவும் அந்த ஆவணங்களில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஆறு ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் பதிவு திருமணம் செய்த விபரங்கள் உள்ளதாகவும் தெரிகிறது.

அது மட்டுமின்றி இந்தியாவில் வாடகைத்தாய் முறைக்கு ஜனவரி மாதம் முதல் தான் கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டது என்பதும் ஆனால் டிசம்பர் மாதமே வாடகைத்தாய்க்கான ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் அதற்கான ஆவணத்தையும் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதிகள் கொடுத்துள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து கடந்த சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்திய நயன்தாரா வாடகைத்தாய் விவகாரம் முடிவுக்கு வருவதாக கூறப்படுகிறது.

More News

கானாத்தூர் மக்களின் தூய்மை பணிகளுக்காக சூர்யாவின் 2D நிறுவனம் வழங்கிய வாகனம்!

சென்னையின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள கானாத்தூர் ரெட்டி குப்பம் பஞ்சாயத்து யூனியனுக்கு, தூய்மை பணிகளை எளிதாக கையாள்வதற்காக நவீன வாகனம் ஒன்றை ஊராட்சி தலைவரிடம்

விஜய்சேதுபதியின் அடுத்த பட டீசர் எப்போது? இயக்குனர் தகவல்!

இந்தாண்டு விஜய் சேதுபதி நடித்த 'காத்துவாக்குல ரெண்டு காதல்' 'விக்ரம்' மற்றும் மாமனிதன் ஆகிய மூன்று திரைப்படங்களும் வெற்றி பெற்ற நிலையில் அவர் தற்போது வெற்றிமாறனின் 'விடுதலை'

சர்தார்' - 'ஜவான்' ஒரே கதையா? 2 படத்தையும் எடிட் செய்யும் எடிட்டரின் பதிலடி பதிவு

கார்த்தி நடித்த 'சர்தார்' மற்றும் ஷாருக்கான் நடித்த 'ஜவான்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே கதைதான் என திரைப்பட விமர்சகர் ஒருவர் கூறியதற்கு இந்த இரண்டு படங்களையும் எடிட்டிங்

பாதாம் தெரியுது, ஆதாம் தெரியலையா? ஜிபி முத்துவை கலாயத்த கமல்ஹாசன்!

'பாதாம் தெரியுது ஆதாம் தெரியவில்லையா? என பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ஜிபி முத்துவை கமல்ஹாசன் கலாய்க்கும் காட்சியின் புரோமோ வீடியோ சற்று முன் வெளியாகி உள்ளன. 

'காந்தாரா' ரிஷப் ஷெட்டியை கட்டிப்பிடித்து பாராட்டிய தமிழ் ஹீரோ: வைரல் வீடியோ!

கன்னட திரையுலகில் சூப்பர் ஹிட்டான 'காந்தாரா' என்ற திரைப்படம் இன்று தமிழில் ரிலீஸ் ஆகியிருக்கும் நிலையில் இந்த படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.