நயன் - விக்னேஷ் சிவனின் ரொமான்ஸ் காதலர் தினம்: புகைப்படம் & வீடியோ!
- IndiaGlitz, [Monday,February 14 2022]
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வரும் நிலையில் இந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 5 ஆண்டுகளாக விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் காதலர் தினத்தின் போது தங்கள் காதல் குறித்த புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் இந்த ஆண்டும் அவர் நயன்தாராவுடன் இணைந்து எடுத்த ரொமான்ஸ் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள். காதல் மட்டுமே வாழ்க்கையை நிறைவு செய்கிறது. எனவே காதலிக்கவும், காதலிக்கப்படவும் ஆர்வம் கொள்ளுங்கள்’ என்று கூறியுள்ளார்.
மேலும் நயன்தாரா தனக்கு பூங்கொத்து கொடுத்து காதலர் தின வாழ்த்துக்கள் தெரிவித்தபோது அவரை கட்டிபிடித்து கொண்ட வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார் இந்த வீடியோ மற்றும் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.