மலேசியாவுக்கு புரமோஷனுக்கு சென்ற நயன்தாரா - விக்னேஷ் சிவன்: வைரல் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Monday,September 25 2023]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் மலேசியாவுக்கு புரமோஷனுக்கு சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நயன்தாரா தனது புதிய நிறுவனத்தை அறிமுகம் செய்து வைத்தார் என்பதும் 9 ஸ்கின் என்ற இந்நிறுவனத்தின் ஸ்கின் கேர் தயாரிப்புகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் என்பதையும் பார்த்தோம்.

இந்த தயாரிப்புகளின் அதிகாரபூர்வ இணையதளம் மற்றும் விற்பனை செப்டம்பர் 29 முதல் செயல்பாட்டுக்கு வரும் என்றும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாரா தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை சிங்கப்பூரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருடன் இணைந்து அவர் சிங்கப்பூர், மலேசியாவில் விற்பனை செய்ய உள்ள நிலையில் அதற்கான புரமோஷன் நிகழ்ச்சிக்காக நயன்தாரா மலேசியாவுக்கு சென்று இருந்தார். அவருடன் அவரது கணவர் விக்னேஷ் சிவனும் சென்றிருந்தார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரல் ஆகி வருகின்றன.

இந்த நிலையில் ’ஜவான்’ வெற்றிக்கு பிறகு தற்போது ஜெயம் ரவியுடன் நயன்தாரா நடித்த ’இறைவன்’ திரைப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாக உள்ளது. அதுமட்டுமின்றி அவர் மாதவனுடன் ’டெஸ்ட்’ மற்றும் ’நயன்தாரா 75’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது