ஓடிடியில் வெளியாகும் நயன்தாராவின் அடுத்த படம்.. 2 வருட தாமதம் ஏன்?
Send us your feedback to audioarticles@vaarta.com
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தயாரித்த திரைப்படம் ஒன்று, இரண்டு வருடங்களாக திரையரங்குகளில் வெளியிட முயற்சித்த நிலையில் தற்போது இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக இருப்பதாகவும் விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் தயாரிப்பில் உருவான திரைப்படம் ’கூழாங்கல்’. இந்த படம் உலகின் பல நாடுகளில் நடந்த சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பரிசுகளை குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2021ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு இந்த படம் பரிந்துரை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்த படத்தை திரையரங்குகளில் தலையிட நயன்தாரா பெரும் முயற்சி செய்த நிலையில் தற்போது நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்றும், இந்த படம் அக்டோபர் 27ஆம் தேதி ஓடிடியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிஎஸ் வினோத் குமார் இயக்கத்தில், யுவன்சங்கர் ராஜா இசையில் பார்த்திபன் ஒளிப்பதிவில் உருவான இந்த படம் ஒரு குடிகார தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான உறவுகளை கூறும் உண்மை சம்பவத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது.
The pride of Tamil cinema, with several awards on its shelf, is going to hit you soon.#Koozhangal - streaming from Oct 27 only on #SonyLIV #Pebbles #PebblesOnSonyLIV @PsVinothraj @VigneshShivN @NayantharaU @Rowdy_Pictures @ParthiDOP@thisisysr @thecutsmaker @Hari_pebbles pic.twitter.com/8eZerDVmVR
— Sony LIV (@SonyLIV) October 21, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com