துபாயில் நயன்தாரா சந்தித்த தமிழ் நடிகை யார் தெரியுமா? வைரல் புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Wednesday,January 05 2022]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த சில நாட்களாக துபாயில் தனது காதலர் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் சுற்றுலா சென்றுள்ளார் என்பதும் சமீபத்தில் புத்தாண்டு தினத்தில் கூட துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிடத்தின் முன்பாக இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளங்களில் வைரலானது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா துபாயில் தமிழ் நடிகை ஒருவரை சந்தித்ததன் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. ’நெஞ்சில் துணிவிருந்தால்’ என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமாகி அதன்பின் ’நோட்டா’ ’பட்டாஸ்’ உள்பட ஒருசில தமிழ் திரைப்படங்களிலும் பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்த நடிகை நகரின் மெஹ்ரின் பிரஸ்தா என்பவரைத்தான் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் சந்தித்துள்ளனர்.

நயன்தாரா, விக்னேஷ் சிவன், மெஹ்ரின் ஆகியோர் துபாயில் இணைந்துள்ள புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வரும் நிலையில் இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கோடி ரூபாய் வைத்தாலும் எடுக்க மாட்டேன்: கூறுவது இந்த போட்டியாளரா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்று லட்ச ரூபாய் மதிப்புள்ள பணப்பெட்டி நேற்று வைக்கப்பட்டது என்பதும் இந்த பணப் பெட்டியை எடுத்துக் கொண்டு ஒரு போட்டியாளர் வெளியே செல்லலாம் என பிக்பாஸ் அறிவித்தும்

சின்ன வயதில் KPY பாலா செய்த பெரிய செயல்: குவியும் வாழ்த்துக்கள்

கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாலா இந்த சின்ன வயதில் செய்த பெரிய செயல் அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. 

'ஆர்.ஆர்.ஆர்' படத்தை அடுத்து மேலும் ஒரு படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு

கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக திரையரங்குகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருவதையடுத்து எஸ்எஸ் ராஜமவுலியின் 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி

ராகவா லாரன்ஸ் படத்தை இயக்கும் ஸ்டண்ட் இயக்குனர்கள்!

தமிழ் திரையுலகின் முன்னணி ஸ்டண்ட் இயக்குனர்கள் தற்போது ஒரு திரைப்படத்தை இயக்க முடிவு செய்திருப்பதாகவும் அந்த படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன

'வலிமை' படத்தில் போனிகபூர் மகள் நடித்தாரா? ஆச்சரிய தகவல்!

அஜித் நடித்த 'வலிமை' திரைப்படம் உலகம் முழுவதும் ஜனவரி 13-ஆம் தேதி ரிலீசாக உள்ளது என இப்போதுவரை செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தாலும் தமிழக அரசு வரும் 10ஆம் தேதி எடுக்கும்