போனிகபூரை திடீரென சந்தித்த நயன்தாரா: வலிமை நாயகியா?

  • IndiaGlitz, [Saturday,November 16 2019]

அஜித் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படமான ’வலிமை’ என்ற திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் நாயகி உள்பட மற்ற நட்சத்திரங்களை தேர்வு செய்யும் பணியில் இயக்குனர் எச்.வினோத் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் போனி கபூரை மரியாதை நிமித்தமாக சந்தித்து உள்ளனர். இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சந்திப்பின்போது போனிகபூர் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த சந்திப்பின்போது போனி கபூர் தயாரிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான ’வலிமை’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க பேச்சுவார்த்தை நடந்து இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

நயன்தாரா தற்போது ரஜினியுடன் ’தர்பார்’ மற்றும் கொரிய மொழி ரீமேக் படமான ’நெற்றிக்கண்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

மகன் திருமணத்திற்கு சில மணி நேரத்திற்கு முன் பரிதாபமாக பலியான தந்தை!

மகனின் திருமணம் நடைபெற ஒருசில மணி நேரத்திற்கு முன்னர் நடந்த ஒரு எதிர்பாராத சம்பவத்தால் தந்தை மரணம் அடைந்த சோக நிகழ்ச்சி  இந்தூர் அருகே உள்ள உஜ்ஜயின் என்ற கிராமத்தில் நடந்துள்ளது 

டெல்லி ஓட்டலில் திருமணமான இளம்பெண் படுகொலை! ஃபேஸ்புக் காதலன் காரணமா?

டெல்லி ஹோட்டல் ஒன்றில் திருமணமான இளம் பெண் மர்மமான முறையில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது அந்த பகுதியில் உள்ளவர்களை பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது 

கணவரின் முதல் மனைவிக்கு ஆபாச படங்கள் அனுப்பிய 2வது மனைவி கைது!

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த வெங்கடேஸ்வர ராவ் என்பவருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் அவருக்கு சுபாஷினி என்ற 39 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது

உதயநிதி குறித்த சர்ச்சை பதிவு: ஸ்ரீரெட்டியின் பரபரப்பு விளக்கம்

தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலக பிரபலங்கள் பலர் தன்னை படுக்கைக்கு அழைததாக பகிரங்கமாக குற்றம் சாட்டி பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீரெட்டி தற்போது

இரண்டு விவசாயிகளின் கடனை தீர்த்த பிகில் வெற்றி!

விஜய் நடித்த பிகில் திரைப்படம் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றது. இந்த படத்தின் மொத்த வசூல் ரூபாய் 300 கோடியை நெருங்கி விட்டதாக