நீச்சல் குளத்தில் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா.. செம்ம வைரலாகும் வீடியோ..!

  • IndiaGlitz, [Monday,September 18 2023]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் நீச்சல் குளத்தில் இருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் நீச்சல் குளத்தில் ஜாலியாக இருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

இந்த வீடியோவில் விக்னேஷ் சிவன் தோளில் நயன்தாரா கை போட்டுக் கொண்டிருக்கும் காட்சி உள்ளது. இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஏராளமான கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர். இன்று சந்தோஷமாக இருப்பது போல் நீங்கள் என்றும் மகிழ்ச்சியாகவும் ஜாலியாகவும் இருக்க வேண்டும் என ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் தெரிவித்து வருகின்றனர்

விக்னேஷ் சிவனின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவாகியுள்ள இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.