எனது உயிர், உலகம் உடன் முதல் ஓணம்.. விக்னேஷ் - நயன் குழந்தைகளின் க்யூட் புகைப்படங்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
கேரளாவில் ஒருவார ஓணம் பண்டிகை கொண்டாட்டம் தற்போது நடைபெற்று வரும் நிலையில் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் நயன்தாரா மற்றும் குழந்தைகளுடன் ஓணம் பண்டிகை கொண்டாடிய புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
எனது உயிர் மற்றும் உலகம் ஆகியோர்களுடன் முதல் ஓணம் பண்டிகையை கொண்டாடுவதில் மிகவும் மகிழ்ச்சி என்றும் அனைவருக்கும் ஓணம் பண்டிகையின் வாழ்த்துக்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இன்னொரு பதிவில் நயன்தாராவுடன் ரொமான்ஸ் ஆக இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ள விக்னேஷ் சிவன் அதில் ’எங்கள் மிக எளிமையான, அழகான வாழ்க்கை தொடர்கிறது. ஓணம் விழாக்கள் இங்கே எனது உயிர் மற்றும் உலகம் ஆகியவர்களுடன் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
அனைவருக்கும் அட்வான்ஸ் ஓணம் பண்டிகையின் மகிழ்ச்சியான வாழ்த்துக்கள் என்று விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments