நயன், விக்கி பார்சிலோனா பயணத்திற்கு அஜித் காரணமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஸ்பெயின் நாட்டிலுள்ள பார்சிலோனாவுக்கு சென்றார்கள் என்பதும் அங்கிருந்து கொண்டு அவர்கள் பதிவு செய்யும் புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகின்றன என்பதும் தெரிந்ததே. நேற்று கூட கருப்பு கிளாமர் உடையில் விக்னேஷ் சிவன் பதிவு செய்திருந்த நயன்தாராவின் புகைப்படங்கள் இணையதளங்களை ஸ்தம்பிக்க வைத்தது.
இந்த நிலையில் அஜீத் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்க இருக்கும் ’ஏகே 62’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜனவரி 1ஆம் தேதி தொடங்க இருப்பதாகவும் இந்த படப்பிடிப்பு பார்சிலோனாவில் தான் நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே நயன்தாராவுடன் இரண்டாவது தேன் நிலவுக்கு சென்ற விக்னேஷ் சிவன் அப்படியே ’ஏகே 62’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புக்கு லொகேஷனையும் பார்த்து வருகிறார் என்று கூறப்படுகிறது.
அஜித் நடித்து வரும் ’ஏகே 61’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நாளை தொடங்க உள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஜனவரி 1ஆம் தேதி அவர் விக்னேஷ் சிவன் இயக்கும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகும் இந்த படம் அடுத்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments