close
Choose your channels

'குட் பேட் அக்லி' படத்தில் நயனும் இல்லை.. ஸ்ரீலீலாவும் இல்லை.. எதிர்பாராத ட்விஸ்ட்..!

Friday, May 31, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’குட் பேட் அக்லி’ என்ற படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்பில் அஜித்தின் அறிமுக பாடல் காட்சி மற்றும் ஒரு அதிரடி ஸ்டாண்ட் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஜூன் 7ஆம் தேதி வரை ’குட் பேட் அக்லி’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் ரஷ்யா செல்ல இருப்பதாகவும் அப்போதுதான் நாயகியை அழைத்துச் செல்ல இருப்பதாகவும் தெரிகிறது '

இந்த நிலையில் இந்த படத்தின் நாயகியாக நயன்தாரா நடிக்க இருப்பதாகவும் அவர் முதல் கட்ட படப்பிடிப்பில் இரண்டு நாள் கலந்து கொண்ட விட்டதாகவும் கூறப்பட்டது. மேலும் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் ஸ்ரீலீலா நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில் நயன் மற்றும் ஸ்ரீலீலா நடிப்பது குறித்து இன்னும் படக்குழுவினர் உறுதி செய்யவில்லை.

இந்த நிலையில் தற்போது இணையதளங்களில் கசிந்து வரும் தகவலின் படி இந்த படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் மட்டும் உண்மையாக இருந்தால் முதல் முதலாக அஜித் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஒரே படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

’குட் பேட் அக்லி’ படத்தின் நாயகியாக நயன்தாரா, ஸ்ரீலீலா, கீர்த்தி சுரேஷ் ஆகிய மூவரில் யார் நடிப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.