10 ஆண்டுகளுக்கு பின் ஒரு சந்திப்பு.. ஒரே முத்தமழை.. நயன்தாரா பதிவு செய்த எமோஷனல் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Monday,June 24 2024]

நடிகை நயன்தாரா 10 ஆண்டுகளுக்கு பின் தனது தோழியை சந்தித்து, கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

கடந்த 2013 ஆம் ஆண்டு அட்லி இயக்கத்தில் உருவான முதல் திரைப்படம் ’ராஜா ராணி’. இந்த படத்தில் ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது என்பதும் வசூலிலும் இந்த படம் சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் நயன்தாரா மற்றும் நஸ்ரியா ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்திருந்தாலும் இருவருக்கும் காம்பினேஷனாக ஒரு காட்சி கூட இல்லை. இருந்தாலும் இருவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பதால் நெருங்கிய தோழிகள் ஆகியிருந்தனர்.

இந்த நிலையில் ’ராஜா ராணி’ படத்திற்கு பிறகு நஸ்ரியா ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்த நிலையில் திடீரென மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். அதன் பிறகு ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார்.

இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு பகத்வாசல் - நஸ்ரியா ஜோடியை விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி சந்தித்துள்ளது. இது குறித்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து ’Finallly’ என்று எமோஷனலாக நயன்தாரா குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.