close
Choose your channels

அதர்வா படத்தில் நயன்தாராவுக்கு என்ன கேரக்டர்?

Friday, September 2, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேல் நடித்து வரும் நயன்தாரா சமீபகாலமாக இளம் நடிகர்களின் படங்களிலும் நடித்து வருகிறார். ஆரி, விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகியோர்களுக்கு ஜோடியாக நடிக்கும் நயன்தாரா தற்போது அதர்வா படத்திலும் நடிக்கவுள்ளதாக வெளிவந்த செய்தியை நேற்று பார்த்தோம்.
இந்நிலையில் இந்த படத்தில் நயன்தாராவின் கேரக்டர் குறித்து இயக்குனர் அஜய் ஞானமுத்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் நயன்தாரா ஒரு முக்கியமான கேரக்டரில் நடிப்பதாகவும், ஆனால் அதர்வாவுக்கு ஜோடியாக அவர் நடிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ள நடிகையின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறியுள்ளார்.
'இமைக்கா நொடிகள்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை கேமியோ பிலிம்ஸ் இந்தியா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கும் என தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment