இந்த ஒரு மகிழ்ச்சிக்காக தினமும் 10 நிமிடங்கள் செலவிடுங்கள்: மாணவர்களுக்கு நயன்தாரா அறிவுரை..!

  • IndiaGlitz, [Tuesday,February 07 2023]

இந்த ஒரு மகிழ்ச்சிக்காக மாணவர்கள் தினமும் 10 நிமிடங்கள் செலவிடுங்கள் என நயன்தாரா அறிவுரை கூறியுள்ளார்.

சென்னையில் சமீபத்தில் நடந்த தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கலந்து கொண்டார். அந்த கல்லூரியின் பிராண்ட் அம்பாசிடராக தேர்வு செய்யப்பட்ட அவர் மாணவர்கள் மத்தியில் பேசும்போது சில அறிவுரைகளை கூறினார்.

கல்லூரியில் படிக்கும் போது நண்பர்களுடன் ஜாலியாக இருக்கலாம், கல்லூரி வாழ்க்கை மகிழ்வானது, ஆனால் அதே நேரத்தில் கல்லூரியில் நீங்கள் யாருடன் பழகுகிறீர்கள் என்பது மிகவும் முக்கியம் என்று தெரிவித்தார்.

கல்லூரி நாட்களில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் எதிர்காலத்திற்கானது என்பதை மறந்து விட வேண்டாம் என்று கூறிய நயன்தாரா, கல்லூரி முடிந்து வெற்றி அடைந்த நபராக மாறினாலும் பணிவாக இருக்க வேண்டும், நிதானமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறினார்.

மேலும் உங்கள் பெற்றோருக்கு தினமும் ஒரு பத்து நிமிடத்தையாவது செலவளியுங்கள் என்றும் அதில் தான் அவர்களது மகிழ்ச்சி இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். நயன்தாராவின் இந்த பேச்சு குறித்த செய்தி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.