மீண்டும் வரலாற்று திரைப்படத்தில் நடிக்கிறாரா நயன்தாரா?
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் சிரஞ்சீவி நடித்த ’சயிர நரசிம்ம ரெட்டி’ என்ற வரலாற்று திரைப்படத்தில் நடித்த லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மீண்டும் ஒரு வரலாற்று திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ் தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளில் அதிக திரைப்படங்களில் நடிகை நயன்தாரா நடித்து இருந்தாலும் கன்னடத்தில் அவர் ’சூப்பர்’ என்ற ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்துள்ளார். இந்த நிலையில் கன்னடத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் வரலாற்றுத் திரைப்படமான ’ராஜ வீர மடகாரி நாயகா’ என்ற படத்தில் நயன்தாரா முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
கன்னட நடிகர் தர்ஷன் ஹீரோவாக நடித்து வரும் இந்த படத்தில் சுமலதா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இரண்டு நாயகிகள் இருப்பதாகவும் அவற்றில் ஒருவர் தனுஷின் ’பொல்லாதவன்’ படத்தில் நடித்த ரம்யா என்றும், இன்னொரு நாயகியாக நடிக்க லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ரஜினிகாந்த் நடித்த ‘லிங்கா’ படத்தை தயாரித்த ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கும் இந்தப் படத்தை ராஜேந்திர சிங் பாபு இயக்குகிறார் அம்சலேகா இசையமைக்கும் இந்த படம் பி.எல்.வேணு என்பவர் எழுதிய வரலாற்றுப் புத்தகத்தின் அடிப்படையில் படம் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கேரளாவில் முடிந்து விட்டதாகவும் விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெறவிருப்பதாகவும் இந்த படப்பிடிப்பில் நயன்தாரா உள்பட படக்குழுவினர் பலர் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com