கெளதம் மேனன் அடுத்த படத்தில் நயன்தாரா? தயாரித்து நடிக்கும் பிரபல ஹீரோ..!

  • IndiaGlitz, [Thursday,June 06 2024]

கௌதம் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடித்த உருவான ’துருவ நட்சத்திரம்’ திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது குறித்த தகவல் இல்லாத நிலையில் அவர் அடுத்த படத்தை இயக்க தயாராகி விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தின் நாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும், இந்த படம் மலையாளத்தில் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் மலையாளத்தில் உருவானாலும் இந்த படம் தமிழிலும் டப் செய்து வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் ஹீரோவாக பிரபல மலையாள நடிகர் மெகா ஸ்டார் மம்முட்டி நடிக்க இருக்கிறார் என்பதும் அவரே இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருப்பதாகவும் அதில் மம்மூட்டி மற்றும் நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

ஸ்டைலிஷ் இயக்குனர் கௌதம் மேனன், மெகா ஸ்டார் மம்முட்டி மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆகிய மூவரும் ஒரே படத்தில் இணைவதை அடுத்து இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சுந்தர் சியின் அடுத்த படத்திலும் 'அரண்மனை 4' பிரபலம் தான்.. மீண்டும் ஒரு 100 கோடி வசூல் படமா?

சுந்தர் சி இயக்கி  நடித்த 'அரண்மனை 4' என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்தது என்பது தெரிந்தது.

இசை வழியே என் தந்தையை கௌரவித்தது, எனக்கு கிடைத்த பெருமை - நடிகை ஸ்ருதிஹாசன் !!

இசைக் கலைஞரும், முன்னணி பாடகியும், முன்னணி நட்சத்திர நடிகையுமான ஸ்ருதிஹாசன் அண்மையில் 'இந்தியன் 2' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு,

சல்மான்கான் - ஏஆர் முருகதாஸ் படத்தில் 2 ஹீரோயின்கள்.. 3 வில்லன்கள்.. மாஸ் தகவல்..!

இயக்குனர் ஏஆர் முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'எஸ்கே 23'படத்தை இயக்கி வரும் நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடிப்பில்

'லியோ'வுக்கு மீண்டும் தமிழில் சஞ்சய் தத்.. மாஸ் ஹீரோவுக்கு வில்லனாகிறாரா?

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'லியோ'  திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், விஜய்யின் அப்பாவாகவும் அதே நேரத்தில் வில்லனாகவும் நடித்திருந்த

'கில்லி'யை அடுத்து சொல்லி அடிக்கும் இன்னொரு விஜய் படம்.. ரீரிலீஸ் தேதி அறிவிப்பு..!

தளபதி விஜய் நடித்த 'கில்லி' திரைப்படம் சமீபத்தில் ரீரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் விஜய்யின் இன்னொரு சூப்பர் ஹிட் படத்தின் ரீரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.