'மன்னன்' விஜயசாந்தி கேரக்டரில் நயன்தாரா?

  • IndiaGlitz, [Saturday,May 05 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கிய 'மன்னன் என்ற வெற்றி படத்தில்  விஜயசாந்தி நடித்த போல்டான கேரக்டர் போன்ற ஒரு கேரக்டரில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கவுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜேஷ் எம் இயக்கத்தில் உருவாகும் படம் ஒன்றின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது என்பது தெரிந்ததே. இந்த படம் முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து, 'ரஜினி' நடித்த மன்னன் பட பாணியில் உருவாகவுள்ளதாம். அந்த படத்தில் விஜயசாந்தி நடித்த ஒரு கேரக்டரை போன்ற ஒரு கேரக்டரில் நயன்தாரா நடிக்கவுள்ளதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் கசிந்துள்ளது.

மேலும் இந்த படத்தை 50 நாட்களில் படப்பிடிப்பு நடத்தி முடிக்கவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. ரஜினியின் மன்னன் திரைப்படமும்  மிகக்குறுகிய காலத்தில் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி கூடிய விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

தமிழக நீட் மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய விஷால்

நீட் தேர்வு நாளை ஞாயிறன்று நடைபெறவுள்ள நிலையில் தமிழக மாணவர்கள் சிலருக்கு மட்டும் வெளிமாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்த விவகாரம் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மகளின் நீட் தேர்வுக்காக கம்மலை அடகு வைத்த தாய்

இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நுழைத்தேர்வான நீட் தேர்வு நாளை நடைபெறவுள்ளது. இதற்காக விண்ணப்பித்திருந்த சில தமிழக மாணவர்களுக்கு கேரளா உள்பட வெளிமாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டிக்கு சிறப்பு ரயில், நீட் மாணவர்களுக்கு சிறப்பு ரயில் இல்லையா?

தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுத வெளிமாநிலங்களுக்கு செல்லும் தமிழக மாணவர்களுக்கு திரையுலகினர் உள்பட பல்வேறு அமைப்பினர்களும், தனிப்பட்ட வகையிலும் பலர் உதவி செய்து வருகின்றனர்.

இந்தியாவில் முதல் முயற்சி எடுக்கும் விஷாலின் 'இரும்புத்திரை

விஷால் நடிப்பில் வரும் 11ஆம் தேதி வெளிவரவுள்ள இரும்புத்திரை' திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தின் புரமோஷன்கள் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ஓட்டுக்கு ஐயாயிரம், நீட்டுக்கு ஆயிரமா? நடிகை கஸ்தூரி காட்டம்

திமுக எம்.எல்.ஏ அன்பழகன் தனது தொகுதியான சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் இருந்து வெளிமாநிலத்திற்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு ரூ.1000 தருவதாக தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.