இதுவரை நடிக்காத கேரக்டர்.. நயன்தாராவின் 81வது படத்தை இயக்கவிருப்பது இவரா?

  • IndiaGlitz, [Tuesday,February 13 2024]

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் பெற்ற நயன்தாரா கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது ’தி டெஸ்ட்’ மற்றும் ’மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நயன்தாரா இதுவரை 80 படங்களில் நடித்துள்ள நிலையில் அவரது 81 வது படத்தை இயக்கும் இயக்குனர் குறித்த தகவல் தற்போது கசிந்து உள்ளது. சிவகார்த்திகேயன் நடித்த ’எதிர்நீச்சல்’ தனுஷ் நடித்த ’கொடி’ உள்பட ஒரு சில படங்களை இயக்கிய இயக்குனர் துரை செந்தில்குமார் கூறிய கதை நயன்தாராவுக்கு பிடித்து விட்டதாகவும் இதனை அடுத்து இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்க இருப்பதாகவும், நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஒரு யானைக்கும் ஒரு இளம் பெண்ணுக்கும் உள்ள பாசப்பிணைப்புதான் இந்த படத்தின் கதை என்றும் நயன்தாரா இதுவரை நடித்திராத கேரக்டர் என்பதால் இந்த படத்தில் நடிக்க உடனே ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

சூரி நடிக்கும் ’கருடன்’ என்ற படத்தை தற்போது இயக்கி வரும் துரை செந்தில்குமார் அடுத்ததாக லெஜென்ட் சரவணன் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இந்த இரண்டு படத்தை முடித்துவிட்டு அவர் நயன்தாராவின் 81 வது படத்தை இயக்குவார் என்று கூறப்படுகிறது.