இதுவரை நடிக்காத கேரக்டர்.. நயன்தாராவின் 81வது படத்தை இயக்கவிருப்பது இவரா?

  • IndiaGlitz, [Tuesday,February 13 2024]

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் பெற்ற நயன்தாரா கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது ’தி டெஸ்ட்’ மற்றும் ’மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நயன்தாரா இதுவரை 80 படங்களில் நடித்துள்ள நிலையில் அவரது 81 வது படத்தை இயக்கும் இயக்குனர் குறித்த தகவல் தற்போது கசிந்து உள்ளது. சிவகார்த்திகேயன் நடித்த ’எதிர்நீச்சல்’ தனுஷ் நடித்த ’கொடி’ உள்பட ஒரு சில படங்களை இயக்கிய இயக்குனர் துரை செந்தில்குமார் கூறிய கதை நயன்தாராவுக்கு பிடித்து விட்டதாகவும் இதனை அடுத்து இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்க இருப்பதாகவும், நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஒரு யானைக்கும் ஒரு இளம் பெண்ணுக்கும் உள்ள பாசப்பிணைப்புதான் இந்த படத்தின் கதை என்றும் நயன்தாரா இதுவரை நடித்திராத கேரக்டர் என்பதால் இந்த படத்தில் நடிக்க உடனே ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

சூரி நடிக்கும் ’கருடன்’ என்ற படத்தை தற்போது இயக்கி வரும் துரை செந்தில்குமார் அடுத்ததாக லெஜென்ட் சரவணன் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இந்த இரண்டு படத்தை முடித்துவிட்டு அவர் நயன்தாராவின் 81 வது படத்தை இயக்குவார் என்று கூறப்படுகிறது.

More News

 50 நாட்கள் கால்ஷீட்.. களரிச்சண்டை, குதிரையேற்ற பயிற்சியில் த்ரிஷா .. எந்த படத்திற்காக?

நடிகை த்ரிஷா பிரபல நடிகரின் படத்திற்காக மொத்தமாக 50 நாட்கள் கால்ஷீட் கொடுத்தது மட்டுமின்றி இந்த படத்திற்காக களரிச்சண்டை மற்றும் குதிரை ஏற்றம் ஆகியவைகளை பயிற்சி பெற்று வருவதாக கூறப்படுகிறது.  

அடிக்கடி இந்த ஒரு விஷயத்திற்காக சென்னை வரும் சூர்யா.. அப்ப 'வாடிவாசல்' டிராப் இல்லையா?

சூர்யா நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'வாடிவாசல்' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று ஒரு கருத்தும், அந்த படம் ட்ராப் என்று ஒரு கருத்தும் திரையுலகில் பரவி வரும்

அம்மா மஞ்சுளா பார்த்து பெருமைப்பட்ட புகைப்படங்கள்.. வனிதாவின் இளமைக்கால போட்டோஷூட்..!

 நடிகை வனிதா தனது தாயார் மஞ்சுளா உயிரோடு இருக்கும் போது எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து இந்த புகைப்படங்களை பார்த்து எனது அம்மா பெருமை பட்டார் என்று பதிவு செய்துள்ளார்.

'அய்யா என்னை மன்னிச்சிடுங்க.. இயக்குனர் மணிகண்டன் வீட்டில் திருடிய திருடனின் கடிதம்..!

'காக்கா முட்டை' இயக்குனர் மணிகண்டன் வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரொக்கம், நகைகள் மற்றும் விருதுகள் திருடு போன நிலையில்  அவற்றை திருடி சென்ற திருடன் தன்னை மன்னிக்குமாறு

கட்டணங்களை இப்படி மாற்றி அமைக்கலாமே.. திரையரங்குகளுக்கு தயாரிப்பாளர் சங்கத்தின் யோசனை..!

பொதுவாக சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகளில் கூட்டம் வருவதில்லை என்றும்  அதனால் சின்ன பட்ஜெட் படங்கள் நன்றாக இருந்தாலும் திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டு