close
Choose your channels

ஜனவரி 6-ல் நயன்தாரா-விக்னேஷ் சிவன் குறித்த முக்கிய அறிவிப்பு

Monday, January 2, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

<

பிரபல நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலர்களாக இருந்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நயன்தாரா நடித்து வரும் படம் ஒன்றுக்கு விக்னேஷ் சிவன் எழுதிய பாடல் வரும் 6ஆம் தேதி வெளியாகவுள்ளது.

'மாயா' என்ற திகில் வெற்றி படத்தை அடுத்து நயன்தாரா தற்போது 'டோரா' என்ற திகில் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இடம்பெற்ற 'எங்கே போற டோரா' என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது பாடல் ஜனவரி 6ஆம் தேதி வெளியாகும் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இந்த பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா, தம்பிராமையா, ஹரிஷ் உத்தமன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை தாஸ் ராமசாமி இயக்கியுள்ளார். விவேக்-மெர்லின் இசையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவும், கோபிகிருஷ்ணா படத்தொகுப்பும் செய்துள்ளனர். இந்த படத்தை பிரபல இயக்குனர் சற்குணம் தயாரித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment