நயன்தாராவின் 'டோரா' அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,March 03 2017]

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்த திகில் படமான 'மாயா' சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து அவர் நடித்துள்ள மற்றொரு திகில் படம் 'டோரா'. இந்த படத்தின் படப்பிடிப்பு, போஸ்ட் புரடொக்ஷன்ஸ் ஆகியவை முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'டோரா' திரைப்படம் மார்ச் 31ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்த படத்தை ஆரோ சினிமாஸ் நிறுவனம் வெளியிடுகிறது. நாயகி நயன்தாராவுக்கு முழுக்க முழுக்க முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக நயன்தாரா நடந்து வரும் ஒரு காட்சிக்கு இணையதளங்களில் பெரும் பாராட்டுக்கள் கிடைத்தது.

பெரிய ஸ்டார் ஹீரோக்களின் படங்களுக்கு இணையாக புரமோஷன் செய்யப்பட்டு வரும் இந்த படத்தில் நயன்தாரா , தம்பிராமையா, ஹரிஷ் உத்தமன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவும், கோபிகிருஷ்ணா படத்தொகுப்பும் செய்துள்ளனர். விவேக்-மெர்வின் இரட்டையர்கள் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகியுள்ளது. குறிப்பாக அனிருத் பாடிய 'ரா ரா ரா' என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் ஒலித்து கொண்டிருக்கின்றது,. இந்த படத்தை பிரபல இயக்குனர் சற்குணம் தயாரித்துள்ளார். அவரது உதவியாளர் தாஸ்ராமசாமி இந்த படத்தின் மூலம் இயக்குனராகியுள்ளார்.

More News

சேவ் சக்தி'யின் நோக்கம் என்ன? நடிகை வரலட்சுமி விளக்கம்

பிரபல நடிகை வரலட்சுமி பெண் திரையுலக கலைஞர்களுக்காக தனி அமைப்பு ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக நேற்று அறிவித்தார்.

ராகவா லாரன்ஸ் போராட்டத்திற்கு திடீரென அனுமதி மறுக்கப்பட்டது ஏன்?

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு தனது பெரும் ஆதரவை கொடுத்த ராகவா லாரன்ஸ் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நெடுவாசல் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டிருந்தார்

இந்த கம்பீரம் அந்த 122 பேர்களுக்கு இருக்குதா? உதயநிதி ஸ்டாலின் கேள்வி

சசிகலா ஆதரவாளரான முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்த 122 எம்.எல்.ஏக்கள் பொதுமக்களின் அதிருப்தியை பெற்று சொந்த தொகுதிக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இந்த 122 எம்.எல்.ஏக்கள் குறித்து நடிகரும், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டால

அமிதாப்-ஜெயாவுடன் ஒப்பிடப்பட்ட அமெரிக்க துப்பாக்கி சூட்டில் பலியான ஸ்ரீனிவாஸ் மற்றும் அவரது மனைவி.

சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள கான்சாஸ் பகுதியில் இனவெறியன் ஒருவனால் துப்பாக்கி சூட்டில் பலியான இந்திய பொறியாளர் ஸ்ரீனிவாஸ் அவர்களின் மரணம் அவரது குடும்பத்தினர்களை மட்டுமின்றி இந்தியர்கள் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

ரஜினியுடன் அதிமுக எம்.எல்.ஏ திடீர் சந்திப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை அவரது போயஸ் கார்டன் வீட்டில் அதிமுக எம்.எல்.ஏவும் நடிகருமான கருணாஸ் திடீரென சந்தித்துள்ளார்.