சிவகார்த்திகேயனின் அடுத்த படத்திலும் முன்னணி ஹீரோயின்

  • IndiaGlitz, [Monday,April 04 2016]
கடந்த பொங்கல் தினத்தில் வெளியான 'ரஜினிமுருகன்' படத்தின் சூப்பர் ஹிட் வெற்றி அந்த படத்தின் நாயகன் சிவகார்த்திகேயனை முன்னணி நடிகர்களின் பட்டியலில் இணைத்துவிட்டது. இந்நிலையில் ஏற்கனவே முன்னணி நடிகை ஹன்சிகா, அவருடன் 'மான் கராத்தே' படத்தில் இணைந்து நடித்த நிலையில் தற்போது கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் நடித்து வரும் 'ரெமோ' படத்தை தயாரிக்கும் 24AM Studios நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்திலும் சிவகார்த்திகேயனே ஹீரோவாக நடிக்கின்றார் என்பதையும் அந்த படத்தை 'தனி ஒருவன்' இயக்குனர் ஜெயம் ராஜா இயக்கவுள்ளார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் நாயகி கேரக்டருக்கு நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஜெயம் ராஜாவின் 'தனி ஒருவன்' படத்திலும் இவர்தான் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகார்த்திகேயன், ஜெயம் ராஜா, நயன்தாரா ஆகியோர் இணையும் இந்த படம் பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரிக்கப்படவுள்ளதால் மூவருக்குமே மேலும் ஒரு வெற்றிப்படமாக இந்த படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

கார்த்தியை இயக்கும் விஜய்யின் வெற்றி இயக்குனர்

இளையதளபதி விஜய் கேரியரில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ஆக்ஷன் படம் என்றால் முதல் வரிசையில் இருப்பது 'போக்கிரி'தான்...

காலையில் சென்னை. மாலையில் ஐதராபாத். சூர்யாவின் மெகா திட்டம்

மூன்று வித்தியாசமான வேடங்களில் சூர்யா நடித்துள்ள '24' படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றதை...

'விஜய் 60' படத்தில் மற்றொரு பிரபல வில்லன்

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவருடைய அடுத்த படமான 'விஜய் 60'...

அதிமுக வேட்பாளர் பட்டியலில் இரண்டு கோலிவுட் நடிகர்கள்

பிரபல காமெடி நடிகரும் நடிகர் சங்கத்தின் துணை தலைவருமான கருணாஸ் நேற்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம்...

சிம்புவின் 'இது நம்ம ஆளு' ரிலீஸ் தேதி

பாண்டியராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா உள்பட பலர் நடித்த 'இது நம்ம ஆளு' திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம்...