விஜய் பட வதந்திக்கு மறுப்பு தெரிவித்த நயன்தாரா

  • IndiaGlitz, [Monday,April 25 2016]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது கார்த்தியுடன் 'காஷ்மோரா' மற்றும் விக்ரமுடன் 'இருமுகன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.


இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி, விஜய் நடித்த 'கத்தி' படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளார். சிரஞ்சீவியின் 150வது படமான இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கவுள்ளதாகவும் இதற்காக அவருக்கு ஒரு பெரிய தொகை சம்பளமாக வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

ஆனால் தற்போது நயன்தாரா இந்த செய்தியை மறுத்துள்ளார். இதுவரை சிரஞ்சீவி தரப்போ, தயாரிப்பாளர் தரப்போ 'கத்தி' ரீமேக்கில் நடிக்க தன்னிடம் அணுகவில்லை என்றும் இது முழுக்க முழுக்க வதந்தி என்றும் அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.

தெலுங்கில் தற்போது பாலகிருஷ்ணாவின் 100வது படத்தில் நயன்தாரா நடிப்பது மட்டுமே உறுதி செய்யப்பட்டிருப்பதாக நயன்தாரா தரப்பில் இருந்து கூறப்படுகிறது.