நயன்தாராவின் பேய்ப்படத்தில் யார் ஹீரோ தெரியுமா?

  • IndiaGlitz, [Friday,March 25 2016]
கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த முதல் பேய்ப்படமான 'மாயா' சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து அவர் நடித்து வரும் மற்றொரு பேய்ப்படத்தை இயக்குனர் சற்குணம் அவர்களின் தயாரிப்பில் அவரது உதவியாளர் தாஸ் ராமசாமி இயக்கி வருகிறார்.

நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த பேய்ப்படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்தாலும், அவர் இந்த படத்தில் பேயாக நடிக்கவில்லை. ஆனால் இந்த படத்தில் அவர் பயன்படுத்தும் கார் பேயாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தில் கார்தான் கிட்டத்தட்ட ஹீரோ என்றும், படத்தின் பல முக்கிய காட்சிகளில் கார் நடித்துள்ளது என்றும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. 'தனி ஒருவன்' படத்தில் அரவிந்தசாமிக்கு அப்பாவாக நடித்த தம்பி ராமையா இந்த படத்தில் நயன்தாராவுக்கு அப்பாவாக நடித்துள்ளார்.

More News

தனுஷ்-பிரபுசாலமன் படத்தின் ஃபர்ஸ்ட்லுக்

கும்கி இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...

12 இந்திய மொழிகளில் ரீமேக் ஆகும் சமுத்திரக்கனி படம்

கடந்த 2012ஆம் ஆண்டு சமுத்திரக்கனி நடிப்பில் வெளிவந்த 'சாட்டை' என்ற சமூக அக்கறை அம்சங்கள் நிறைந்த திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றதை...

முதன்முதலாக மூன்று வேடங்களில் ஜெய்

ஜெய், சுரபி நடிப்பில் சமீபத்தில் ரிலீஸான 'புகழ்' திரைப்படம் ஓரளவு வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது ஜெய் அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார்...

ராகவா லாரன்ஸின் முதல் முயற்சி

'காஞ்சனா 2' என்ற சூப்பர் ஹிட் படத்தை அடுத்து தற்போது ராகவா லாரன்ஸ் 'மொட்ட சிவா கெட்ட சிவா' என்ற படத்தில்...

அட்லியின் அடுத்த படமும் பாதி ரெடி

விஜய் நடிப்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் 'தெறி' படத்தை இயக்கி முடித்துள்ள இயக்குனர் அட்லி, தன்னுடைய 'ஏ ஃபார் ஆப்பிள்'...