close
Choose your channels

அடுத்த கட்டத்தை நோக்கி நயன்தாராவின் 'அறம்'

Wednesday, February 15, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த சில வருடங்களாக நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டர்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் நயன்தாரா கலெக்டராக நடிக்கும் படம் 'அறம்'

ஒரு கிராமத்தின் தண்ணீர் தேவைக்காக கலெக்டர் ஒருவர் களமிறங்கும் கதையின் நாயகியாக நடித்து வரும் நயன்தாராவுக்கு இந்த படம் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அடுத்தக்கட்டமாக டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தின் அட்டகாசமான டிரைலர் தயாராகி வருவதாகவும், விரைவில் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தரப்பில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவினையும் மிக விரைவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இயக்குனர் மீஞ்சூர் இயக்கி வரும் இந்த படத்தில் 'காக்கா முட்டை' புகழ் விக்னேஷ் - ரமேஷ் முக்கிய கதாபாத்திரங்களிலும், வேலு ராமமூர்த்தி, ஈ ராம்தாஸ், சுன்னு லக்ஷ்மி மற்றும் ராம்ஸ் வலுவான கதாபாத்திரங்களிலும் நடித்து வருகின்றனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு, லால்குடி இளையராஜா கலை இயக்கம் , கோபி கிருஷ்ணா எடிட்டிங், பீட்டர் ஹெய்ன் சண்டைப்பயிற்சி, என தலைச் சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த படத்தில் பணியாற்றியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.