24 மணி நேர இடைவெளியில் இரட்டை விருந்து தரும் நயன்தாரா

  • IndiaGlitz, [Tuesday,May 16 2017]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் 'டோரா' திரைப்படம் வெளியான நிலையில் அவர் தற்போது 'இமைக்கா நொடிகள்', 'கொலையுதிர்க்காலம்', 'வேலைக்காரன்' மற்றும் 'அறம்' ஆகிய நான்கு தமிழ்ப்படங்களிலும் ஒரு தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.

அதர்வாவுடன் நயன்தாரா நடித்து வரும் திரைபடமான 'இமைக்கா நொடிகள்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகும் தேதி குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நாளை அதாவது மே 17ஆம் தேதி இரவு 7 மணிக்கும், இந்த படத்தின் டீசர் நாளை மறுநாள் அதாவது மே 18ஆம் தேதி இரவு 7 மணிக்கும் வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் நயன்தாராவின் படம் ஒன்றின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டீசர் ஆகியவை அடுத்தடுத்து வெளிவரவுள்ளதால் அவரது ரசிகர்களுக்கு இது இரட்டை விருந்தாக இருக்கும் என கருதப்படுகிறது.

அதர்வா, நயன்தாரா, ராஷிகண்ணா, அனுராக் காஷ்யப், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தை அஜய்ஞானமுத்து இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே அருள்நிதியின் 'டிமாண்டி காலனி' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கும் இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவும், புவன்ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர்.