சர்வதேச தரத்தில் 'மாயா' வில்லனின் அடுத்த படம்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் அம்ஜத்கான் 'வல்லினம்' படத்தில் அறிமுகமானாலும், அவருக்கு பெயர் வாங்கிக்கொடுத்த திரைப்படம் நயன்தாராவின் 'மாயா' திரைப்படம்தான். இந்த படத்தில் அவர் ராம் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
இந்நிலையில் அம்ஜத்கான் தற்போது 'இக்லூ' (Igloo) என்ற புதிய படத்தில் கதாநாயகான நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக லட்சுமிப்ரியா சந்திரமெளலி என்பவர் நடித்து வருகிறார். புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்த படத்தை சி.வி.குமாரிடம் உதவியாளராக இருந்த பாரத்மோகன் இயக்கவுள்ளார்.
இந்த படத்திற்கு என தனியாக செட் எதுவும் போடாமல் முழுக்க முழுக்க இயற்கையாக படமாக்கப்பட்டு வருகிறது. பிரபல மருத்துவமனை ஒன்றில் கேமரா ஒளித்து வைக்கப்பட்டு மிக இயல்பான காட்சிகள் படமாக்கப்பட்டதாம். சர்வதேச தரத்தில் உருவாகி வரும் இந்த படத்தை வெற்றிமாறனின் 'விசாரணை' படத்தினை போலவே வெளிநாடுகளில் நடைபெறும் திரைப்படவிழாவில் திரையிட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout