close
Choose your channels

'குவீன்' ரீமேக்கில் நயன்தாரா நடிக்க மறுத்தது ஏன்?

Thursday, March 17, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலிவுட்டில் சூப்பர் ஹிட் ஆன 'குவீன்' திரைப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகரும் இயக்குனருமான தியாகராஜன் வாங்கி வைத்திருக்கும் நிலையில் இந்த படத்தில் கங்கனா ரனாவத் நடித்த கேரக்டரில் நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்ததாக செய்திகள் வெளிவந்தது.


ஆனால் இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெறவுள்ளதால் அதிக நாடுகள் கால்ஷீட் கேட்டதாகவும், இதனால் நயன்தாரா தற்போது நடித்து கொண்டிருக்கும் திருநாள், காஷ்மோரா, இருமுகன் ஆகிய படங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதாலும் இந்த படத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

'குவீன்' தமிழ் ரீமேக்கின் திரைக்கதையை சுஹாசினியும், இந்த படத்தை ரேவதி இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. நயன்தாரா இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டதை அடுத்து வேறு பொருத்தமான நாயகி தேடும் பணி நடந்து வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment