close
Choose your channels

ஹாலிவுட் பட ரீமேக்கில் நயன்தாரா?

Tuesday, March 8, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2009ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் ரிலீஸ் ஆன த்ரில் திரைப்படம் 'ஆர்பன்'. இந்த படத்தில் ஒரு குழந்தை பேயாக நடித்திருக்கும். சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற இந்த படத்தை தழுவிதான் நயன்தாரா நடிக்கும் படம் ஒன்று தயாராகி வருவதாக கூறப்படுகிறது.


இயக்குனர் சற்குணம் தயாரிப்பில் அவரது உதவியாளர் தாஸ் ராமசாமி இயக்கி வரும் த்ரில் திரைப்படத்தில் நயன்தாரா நடித்து வரும் படம்தான் 'ஆர்பன்' படத்தை தழுவி எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் 'மாயா'வை அடுத்து மீண்டும் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்க நயன்தாரா ஒப்புக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னுடை டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தில் தம்பி ராமையா, ஹரிஷ் உத்தமன் உள்பட பலர் நடிக்கவுள்ளனர். விவேக் மெர்வின் இசையமைக்கும் இந்த படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கவரும் வகையில் எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment