லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 'டோரா' ரன்னிங் டைம்

  • IndiaGlitz, [Tuesday,March 28 2017]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சமீபகாலமாக நாயகிக்கு முக்கியத்தும் உள்ள வேடங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடித்த 'மாயா' உள்பட பல படங்கள் வெற்றி பெற்ற நிலையில் மீண்டும் அவர் நடித்துள்ள ஒரு திகில் படம்தான் 'டோரா'
இந்த படம் வரும் 31ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலிஸ் ஆக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கு சமீபத்தில் சென்சார் போர்டு 'ஏ'சர்டிபிகேட் அளித்தது. இந்த படத்தில் இடம்பெற்ற திகில் காட்சிகளுக்காக 'ஏ'சர்டிபிகேட் கிடைத்துள்ளதால் தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் விளக்கம் அளித்தது.
மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. இந்த படம் 137 நிமிடங்கள் 58 வினாடிகள் அதாவது 2 மணி நேரம் 17 நிமிடங்கள் 58 வினாடிகள் ஓடுகின்றது.
'டோரா' திரைப்படம் 'ஏ' சர்டிபிகேட் பெற்றுள்ளதால் தமிழக அரசின் வரிவிலக்கு சலுகை கிடைக்க வாய்ப்பில்லை. இருப்பினும் இந்த படத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய எதிர்பார்ப்பு காரணமாக இந்த படத்தின் வசூல் அனைத்து தரப்பினர்களுக்கும் திருப்திகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நயன்தாரா , தம்பிராமையா, ஹரிஷ் உத்தமன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவும், கோபிகிருஷ்ணா படத்தொகுப்பும் செய்துள்ளனர். விவேக்-மெர்வின் இரட்டையர்கள் இசையமைத்துள்ள இந்த படத்தை பிரபல இயக்குனர் சற்குணம் தயாரித்துள்ளார். அவரது உதவியாளர் தாஸ்ராமசாமி இந்த படத்தின் மூலம் இயக்குனராகியுள்ளார்

More News

சமுத்திரக்கனி படத்தில் இருந்து திடீரென விலகிய பிரபல நடிகை

சமுத்திரக்கனி இயக்கி நடித்த 'அப்பா' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது

நடிகர் சங்க கட்டிட அடிக்கல் நாட்டு விழா தேதி அறிவிப்பு

நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக பதவியேற்ற நாசர் தலைமையிலான இளைஞர்கள் அணி, கடந்த சில மாதங்களில் பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது

முக்குலத்தோர் புலிப்படையில் இருந்து கருணாஸ் திடீர் நீக்கம்.

பிரபல நகைச்சுவை நடிகர் மற்றும் திருவாடனை தொகுதியின் எம்.எல்.வுமான கருணாஸ் சமீபத்தில் தனது 'முக்குலத்தோர் புலிப்படை' கட்சியின் அனைத்து நிர்வாகிகளையும் கூண்டோடு நீக்கி அதிரடி உத்தரவிட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

சென்னை லைகா நிறுவனத்திற்கு திடீர் பாதுகாப்பு ஏன்?

லைகா நிறுவனத்தின் அறக்கட்டளையின் சார்பில் இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு வீடு வழங்கும் விழா ஒன்றை வரும் ஏப்ரல் 8ஆம் தேதிநடத்த திட்டமிட்டிருந்தது.

கமலின் மகாபாரத கருத்து குறித்து அக்சராஹாசன் கூறியது என்ன?

உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் அளித்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்றைய அரசியல், அரசியல்வாதிகள் குறித்து கமல் கூறிய பல கருத்துக்கள் ஆக்கபூர்வமாக இருந்தாலும் ஒருசில அரசியல்வாதிகளுக்கு கோபத்தை வரவழைத்தது.