மம்முட்டியுடன் நடிக்கும் நயன்தாராவின் கேரக்டர்
Send us your feedback to audioarticles@vaarta.com
லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பிசியாக முன்னணி இடத்தில் இருந்தாலும், தாய் மொழியான மலையாளத்திலும் அவ்வப்போது நல்ல கேரக்டர் அமைந்தால் நடித்து வருகிறார். இருப்பினும் அவர் சமீப காலங்களில் ஒரே வருடத்தில் இரண்டு மலையாள படங்களில் நடித்தது இல்லை. ஒரு வருடம், அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே மலையாள படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு வந்த நயன்தாரா, இவ்வருடம் இரண்டு மலையாள படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
ஏற்கனவே இவ்வருட ஆரம்பத்தில் பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தில் மம்முட்டியுடம் நடித்திருந்த நயன்தாரா, தற்போது 'புதிய நியமம்' என்ற படத்தில் மீண்டும் மம்முட்டியுடன் ஜோடி சேர்ந்துள்ளார். இந்த படம் கலப்பு திருமணம் செய்த ஜோடிக்கு சமூகத்தில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து அலசுகிறது. இந்த படத்தின் ஸ்கிரிப்டை முழுதாக படித்துவிட்டு நயன்தாரா உடனே 'யெஸ்' சொல்லிவிட்டதாக படத்தின் இயக்குனர் ஏ.கே.சாஜன் கூறியுள்ளார்.
இந்த படத்தில் 'லூயீஸ் போத்தன்' என்ற கேரக்டரில் மம்முட்டி வழக்கறிஞராக நடித்து வருவதாகவும், நயன்தாரா 'வாசுகி' என்ற வித்தியாசமான கேரக்டரில் நடித்து வருவதாகவும் இயக்குனர் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments