ரஜினி, அஜித்தை தட்டிக்க ஆளே இல்லை: நயன்தாரா

  • IndiaGlitz, [Tuesday,October 03 2017]

பொதுவாக ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆகும்போது அதன் புரமோஷனில் படக்குழுவினர் அஜித் அல்லது விஜய் குறித்து பேசுவதை வழக்கமாக்கி கொண்டுள்ளனர். விஜய், அஜித் ரசிகர்களை கவர அவர்கள் செய்யும் வியாபார தந்திரமாகவும் இது பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த ஃபார்முலா லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவையும் விட்டு வைக்கவில்லை. தான் நடிக்கும் படங்களின் புரமோஷனில் கலந்து கொள்ளாதவர் என்று பெயரெடுத்த நயன்தாரா தற்போது 'அறம்' படத்தின் புரமோஷனில் மிகுந்த ஈடுபாடு காட்டி வருகிறார்

இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் அவர் ரஜினி குறித்தும், அஜித் குறித்தும் பேசி படத்திற்கு நல்ல விளம்பரத்தை தேடி தந்துள்ளார். அஜித் குறித்து அவர் கூறியபோது, 'அஜித் போன்ற ஒருவரை நான் பார்த்த்தே இல்லை. சூட்டிங் செட்டில் அனைவரையும் அன்பாக விசாரிப்பார். அவரும் சரி ரஜினி சாரும் சரி, பெண்கள் விஷயத்தில் மிகவும் மரியாதையாக நடந்து கொள்வார்கள். தன் அருகே பெண்கள் வந்தால் இருவரும் எழுந்து நின்று மரியாதை கொடுத்து பேசுவார்கள். அந்த விஷயத்தில் அவர்களை தட்டிக்க ஆளே இல்லை. அதனால் அவர்களுக்கு மிகப்பெரிய ஸ்டார் வேல்யூ உள்ளது.” என்று கூறினார்.

நயன்தாராவின் இந்த கருத்து அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. அஜித்துடன் அவர் நடித்தது பில்லா, ஏகன், ஆரம்பம் என்ற மூன்றே படங்கள் மட்டுமே என்றாலும் அவரை சரியாக புரிந்து வைத்திருப்பதை கண்டு அஜித் ரசிகர்கள் நயன்தாராவுக்கு சமூக வலைத்தளத்தில் புகழாரம் சூட்டி வருகின்றனர். மொத்தத்தில் 'அறம்' படத்திற்கு நல்ல புரமோஷன் கிடைத்துவிட்டது என்பதே உண்மை