close
Choose your channels

என்ன ஒரு அழகு... உயிர்-உலகு  பிறந்த நாளை கொண்டாடும் விக்கி-நயன் வைரல் புகைப்படங்கள்..!

Wednesday, September 27, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் தங்கள் இரட்டை குழந்தைகளின் பிறந்தநாளை கொண்டாடும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ள நிலையில் ’என்ன ஒரு அழகு’ ’என்ன ஒரு க்யூட்’ என ரசிகர்கள் கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.

நடிகை நயன்தாரா கடந்த ஆண்டு ஜூன் 9ஆம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து அக்டோபர் மாதம் தங்களுக்கு வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக

இந்த நிலையில் தற்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் தங்கள் இரட்டை குழந்தைகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர் தங்களது சமூக வலைதளத்தில் இருவரும் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் க்யூட்டாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் தெரிவித்து வருகின்றனர் இந்த பதிவில் விக்னேஷ் சிவன் கூறியிருப்பதாவது:

என் முகம் கொண்ட .. என் உயிர்
என் குணம் கொண்ட … என் உலகம்

(இந்த வரிகளையும் ஒன்றாக பதிவிட நீண்ட நாட்களாக காத்திருந்தேன் என் அன்பான குழந்தைகளே)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் அன்பு மகன்களே
உயிர் ருத்ரோநீல் & உலக் டெய்விக்

அப்பாவும் அம்மாவும் வார்த்தைகளால் விளக்க முடியாத அளவுக்கு உங்கள் இருவரையும் விரும்புகிறோம்.

எங்கள் வாழ்க்கையில் நீங்கள் இருவரும் வந்து அதை மிகவும் மகிழ்ச்சியாக ஆக்கியதற்கு நன்றி! நீங்கள் அனைத்து நேர்மறைகளையும் ஆசீர்வாதங்களையும் கொண்டு வந்துள்ளீர்கள், இந்த ஒரு முழு ஆண்டு வாழ்நாள் முழுவதும் ரசிக்க வேண்டிய தருணங்களால் நிரப்பப்பட்டுள்ளது! என்று பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment