கேக் வெட்டி கொண்டாடிய நயன்தாரா - சமந்தா: காரணம் இதுதான் 

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகிவரும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து படக்குழுவினர் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்பே இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டாலும் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் படமாக்கப்பட வேண்டிய நிலை இருந்தது என்பதும் அந்த பாடல் காட்சியும் சமீபத்தில் சென்னையில் படமாக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ‘காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றதை அடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். குறிப்பாக நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய இருவரும் இந்த கொண்டாட்டத்தில் ஈடுபட்டதன் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் விரைவில் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'வலிமை' திரைப்படத்தை பார்த்து தான் முதல்வர் இந்த உத்தரவை பிறப்பித்தாரா?

அஜித் நடித்த 'வலிமை' திரைப்படத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பார்த்து ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 'நம்ம ஆட்டம் இனிமேல் வேற மாதிரி இருக்கும்':  'பீஸ்ட்' டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தளபதி விஜய் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகிய 'பீஸ்ட்' திரைப்படம் வரும் ஏப்ரல் 13ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது.

கமலின் 'விக்ரம்' படத்தை வெளியிடும் நிறுவனம்: அட்டகாசமான போஸ்டர்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிய 'விக்ரம்' படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்யும் நிறுவனம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது. 

'வாடிவாசல்' பிசினஸ் ஆரம்பமாகிவிட்டதா? பிரபலம் கூறிய ஆச்சரிய தகவல்!

சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'வாடிவாசல்' படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில மாதங்களில் தொடங்க இருப்பதாக கூறப்படும் நிலையில்

மீண்டும் இணையும் பிரபாஸ்-அனுஷ்கா ஜோடி: இயக்குனர் யார் தெரியுமா? 

தெலுங்கில் வெளியான 'பில்லா' திரைப்படம் உள்பட ஒரு சில திரைப்படங்களில் ஏற்கனவே பிரபாஸ் மற்றும் அனுஷ்கா இணைந்து நடித்திருந்தாலும் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான 'பாகுபலி'