'நானும் ரவுடிதான்' நயன் கேரக்டர். இதுவரை வெளிவராத தகவல்

  • IndiaGlitz, [Saturday,October 03 2015]

தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய்சேதுபதி நடித்துள்ள 'நானும் ரெளடிதான்' படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் முக்கிய தகவல் ஒன்று தற்போது கசிந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் விஜய்சேதுபதியுடன் முதல்முறையாக இணைந்துள்ள கோலிவுட்டின் முன்னணி நடிகை நயன்தாரா 'காதம்பரி' என்ற கேரக்டரில் நடித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இந்த கேரக்டருக்கு காது கேட்கும் திறன் இல்லை என்றும் உதட்டின் அசைவை வைத்தே அவர் எதிரில் உள்ளவர்கள் பேசுவதை புரிந்து கொள்ளும் திறன் உள்ளவர் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

விஜய்சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன், ராதிகா சரத்குமார், ஆர்ஜே பாலாஜி, ஆனந்த்ராஜ் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 'போடா போடி' படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில் இன்று இரவு ஏழு மணிக்கு இந்த படத்தின் சிங்கிள் டிராக் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.