close
Choose your channels

ரகசிய போலீஸ் கேரக்டரில் லேடி சூப்பர் ஸ்டார்

Thursday, February 4, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அரிமா நம்பி இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா நடித்து வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மலேசியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விக்ரம் இருவேடங்களில் நடித்து வரும் இந்த படத்தில் நயன்தாரா மற்றும் நித்யாமேனன் நாயகிகளாக நடித்து வருகின்றனர்.


இந்நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இந்த படத்தில் ரகசிய போலீஸ் கேரக்டரில் நடித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் தம்பி ராமையா மலேசிய போலீஸாகவும், 'தூங்காவனம்' புகழ் யூகிசேது மற்றொரு முக்கிய கேரக்டரில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

விஜய்யின் 'புலி' தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷிபு தமீன்ஸ் தயாரித்து வரும் இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கின்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.