நயன் மேம் டு மனைவி: விக்னேஷ் சிவனின் நெகிழ்ச்சியான பதிவு

நயன்தாராவை முதல் முதலில் 'நானும் ரவுடிதான்’ படத்திற்காக பார்த்தபோது நயன்தாரா மேம் என்று கூறிய நிலையில் தற்போது படிப்படியாக உறவு வளர்ந்து, இன்று எனது மனைவியாகி இருக்கிறார் என்றும் திருமணத்திற்குப் பின்னர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியான பதிவு செய்துள்ளார்.

இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்று இந்து முறைப்படி நடிகை நயன்தாராவை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண புகைப்படங்களும் தற்போது வைரலாக தொடங்கிவிட்டன.

இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் நெகிழ்ச்சியான பதிவில் விக்னேஷ் சிவன் கூறியபோது 'நயன்தாரா மேடம் என்று ஆரம்பத்தில் அழைத்து, அதன்பின் காதம்பரி, தங்கமே, மை பேபி, எனது உயிர், மற்றும் என் கண்மணி என்று அழைத்தேன். இன்று முதல் அவர் எனது மனைவி’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவும் இந்த பதிவுடன் சேர்ந்து அவர் பதிவு செய்துள்ள புகைப்படங்களும் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.