உலகப்புகழ் பெற்ற கிஸ் வால் முன் நயன் - விக்கி: எப்படி முத்தம் கொடுக்குறாங்க பாருங்க!

ஸ்பெயின் நாட்டில் உள்ள உலக புகழ்பெற்ற கிஸ் வால் முன் நயன் மற்றும் விக்கி முத்தம் கொடுப்பது போன்று எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ஸ்பெயின் நாட்டிலுள்ள பார்சிலோனா செல்லும் காதலர்கள் மறக்காமல் செல்லும் இடம் கிஸ் வால். இங்கு உள்ள சுவர்களில் லிப்கிஸ் கொடுக்கும் ஓவியங்களின் முன் காதலர்கள் புகைப்படம் எடுத்து கொள்வது வழக்கமான ஒன்றாக உள்ளது.

இந்த நிலையில் தற்போது இரண்டாவது தேனிலவுக்கு பார்சிலோனா சென்றுள்ள நயன் மற்றும் விக்கி இந்த உலகப் புகழ்பெற்ற கிஸ் வால் அருகே எடுத்துக்கொண்ட புகைப்படம் அவர்களது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிஸ் வால் சுவரில் உள்ள உதட்டுடன் உதடு முத்தம் கொடுக்கும் ஓவியத்தின் முன் நயன் மற்றும் விக்கி தூரத்தில் இருந்து கொண்டே ஃபிளையிங் கிஸ் கொடுக்கும் வகையில் போஸ் கொடுத்துள்ளனர். இந்த புகைப்படத்திற்கு 3 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ் மற்றும் ஆயிரத்துக்கும் அதிகமான கமெண்ட்ஸ் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.