விக்கி-நயன் இணைந்தது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு!

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த ’நானும் ரவுடிதான்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பின் இடையே இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது என்பதும் கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து வரும் இந்த காதல் விரைவில் திருமணத்தில் முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் திருமண பந்தத்தில் இணையும் முன்னரே இருவரும் திரையுலகில் மீண்டும் இணையவுள்ளனர். ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளார் என்பது தெரிந்ததே. அந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

இதற்கு முன்னதாகவே இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தை வெளியிட ஒப்பந்தம் செய்துள்ளனர். இயக்குனர் அருண் மாதேஸ்வரன் என்பவர் இயக்கிய ’ராக்கி’ என்ற திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து பெற்றுள்ளனர். இவர்களது ரவுடி பிக்சர்ஸ் சார்பில் இந்த திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை விக்னேஷ் சிவன் அதிகாரப்பூர்வமாக தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.

எனது நண்பர் அருண் மாதேஸ்வரனும், நானும் பல ஆண்டுகளாக உதவி இயக்குனராக பணி புரிந்தோம். தற்போது இருவரும் ஒரு படத்தில் இணைந்து உள்ளது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நயனும் நானும் இணைந்து இந்த படத்தை வெளியிடுகிறோம் என்று அறிவித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகின்றன என்பது தெரிந்ததே. மேலும் சமீபத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் பார்வையாளர்களின்

சமந்தாவுடன் முதல்முறையாக இணையும் தமன்னா!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளாக இருக்கும் சமந்தா மற்றும் தமன்னா ஆகிய இருவரும் ஒரு படத்தில் கூட இன்னும் இணைந்து நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இப்படி நடக்கும் என்று தெரிந்திருந்தால்.... சித்ரா குறித்து சக நடிகையின் உருக்கமான பதிவு!

சின்னத்திரை நடிகை சித்ரா இன்று அதிகாலை தான் தங்கியிருந்த ஓட்டல் அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னத்திரை உலகத்தையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்ட

'தளபதி 65' படத்தின் டைட்டில் இதுவா? வைரலாகும் போஸ்டர்!

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் 'தளபதி 65' படத்தை இயக்க இருப்பது யார்

கின்னஸ் சாதனையில் 10 நொடிகளில் தூள் தூளாக்கப்பட்ட 144 மாடிக்கொண்ட கட்டிடம்…

அபுதாபியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக முக்கிய வணிக நிறுவனமாக இயங்கி வந்த கட்டிடம் ஒன்று வெறுமனே 10 நொடிகளில் தகர்க்கப்பட்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளது.