டபுள் விருந்து தரும் நயன்தாரா - விஜய்சேதுபதி?

  • IndiaGlitz, [Friday,July 20 2018]

கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'கோலமாவு கோகிலா' மற்றும் 'இமைக்கா நொடிகள்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் 'கோலமாவு கோகிலா' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 'இமைக்கா நொடிகள்' திரைப்படத்தையும் அதே ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாகவும், அனேகமாக இந்த படம் ஆகஸ்ட் 24ஆம் தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே ஆகஸ்ட் 24ஆம் தேதி விஜய்சேதுபதி-த்ரிஷாவின் '96' படமும் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் ஒரே நாளில் நயன்தாரா மற்றும் த்ரிஷா படங்கள் வெளியாகிறது என்பது மட்டுமின்றி இரண்டு படங்களிலும் விஜய் சேதுபதி நடித்துள்ளதால் இருவரும் தங்கள் ரசிகர்களுக்கு டபுள் விருந்து தரும் வகையில் அமைந்துள்ளது.

'டிமாண்டி காலனி' இயக்குனர் அஜய்ஞானமுத்து இயக்கியுள்ள இந்த படத்தில் நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப், ரமேஷ் திலக் மற்றும் சிறப்பு தோற்றத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவில், புவன்ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை . கேமியோ பிலிம்ஸ்' ஜெயக்குமாரின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ளது.
 

More News

ஆகஸ்ட் 15ஆம் தேதியை குறிவைக்கின்றதா 'சீமராஜா'?

சிவகார்த்திகேயன், சமந்தா நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் 24ஏம் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் 'சீமராஜா' திரைப்படம் வரும் செப்டம்பர் 13ஆம் தேதி வினாயகர் சதுர்த்தி தினத்தில் வெளியாகவுள்ளதாக

என்னை ஏற்று கொள்ள விரும்புபவரை திருமணம் செய்ய தயார்: ஸ்ரீரெட்டி

என்னுடைய பழைய வாழ்க்கையை அறிந்து என்னை விரும்பி ஏற்று கொள்ள முன்வருபவரை திருமணம் செய்ய தயார் என்று ஸ்ரீரெட்டி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தமிழ் ரசிகர்களுக்கு சன்னிலியோன் அளித்த தகவல்

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோனின் வாழ்க்கை வரலாறு வெப் தொடரான 'கரஞ்சித் கவுர்' தமிழ் உள்பட பல மொழிகளில் சமீபத்தில் வெளியாகியுள்ளது.

தமிழக சிறுமிக்கு உலகக்கோப்பை கால்பந்து போட்டியின்போது கிடைத்த பெருமை

சமீபத்தில் நடந்து முடிந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது என்பது அனைவரும் அறிந்ததே.

கமல்ஹாசனை சந்திக்க மறுத்த பகவான் ஆசிரியர்

சமீபத்தில் திருவள்ளூரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்த பகவான் என்ற ஆசிரியருக்கு இடமாற்ற உத்தரவு வந்தபோது அந்த பள்ளியில் படித்த மாணவ,