close
Choose your channels

முத்தங்களை பரிமாறிய நயன் - விக்கி.. என்ன விசேஷம்? ரொமான்ஸ் புகைப்படங்கள்..!

Wednesday, September 18, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா இருவரும் முத்தங்களை பரிமாறிய புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகிறது. இருவருக்கும் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

இயக்குனர் விக்னேஷ் சிவன், 2022 ஆம் ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி, நடிகை நயன்தாராவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு உயிர் மற்றும் உலகம் என பெயரிடப்பட்ட இரட்டை குழந்தைகள் உள்ளனர். இவர்களின் புகைப்படங்கள் விக்னேஷ் சிவனின் மற்றும் நயன்தாராவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது வைரலாகி வரும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

இந்நிலையில், இன்று விக்னேஷ் சிவன் தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு நயன்தாரா இன்ஸ்டாகிராமில் இனிய வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இருவரும் தனிமையில் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் நயன்தாராவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

இந்த புகைப்படங்களில், விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் இடையிலான பாசமான காட்சிகள், முத்தங்கள், கட்டி அணைத்துக் கொண்டிருக்கும் ரொமான்டிக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த புகைப்படங்களுக்கு லட்சக்கணக்கான லைக்குகள், நூற்றுக்கணக்கான கமெண்ட்கள் குவிந்து வருகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment